கேரளாவிற்கு அடுத்ததாக இலங்கை! இந்தியா - அமெரிக்கா - உலகநாடுகளின் திடீர் கரிசனை

Report Print Banu in இலங்கை
2426Shares

வல்லரசு தேசங்களான அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை எப்படிப் பார்க்கின்றன, இலங்கை தொடர்பில் அந்த தேசங்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன, ஈழத் தமிழர்கள் உலக நாடுகளை எவ்வாறு அணுகவேண்டும் போன்ற விடயங்கள் பற்றிய ஒரு ஆழமான பார்வையை கலாநிதி மதுரா ராசரத்தினம் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் புலம்பெயர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு இணையவழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் மேற்கொண்ட ஆய்வு உரையின் போதுதான் அவர் இந்த விடயங்கள் பற்றித் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்கா - சீனா உறவு தென்னாசிய நாடுகளின் பொருளாதாரத்தில் தங்கியுள்ளது. சீனா, கனடா போன்ற முக்கிய நாடுகளுடனே அமெரிக்கா வர்த்தக ரீதியான உறவுகளை பேணுகிறது. அது இலங்கையுடன் அவ்வளவான உறவை வர்த்தக ரீதியில் பேணுவதில்லை என்று கூறியுள்ளார்.