யாழ்ப்பாணம் - நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.
நிலாவரைக் கிணறு பகுதிக்கு இன்று முற்பகல் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதேவேளை , பொலிஸ் பரிசோதகர்களாக 150 சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் நீதி அமைச்சரின் திட்டத்தின் மூலம் இனவாத மதவாத சதி முன்னெடுக்கப்படுகின்றது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இதனை தௌிவுபடுத்தி எல்லே குணவன்ஸ தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பு,