இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்களை சட்டமுறைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக இந்த ஆவணங்கள் இலங்கையின் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான சட்டமுறை ஆவணங்களை எதிர்பார்ப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனையடுத்தே இலங்கை இந்த ஆவணங்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.