கொரோனா தடுப்பூசிகளை விரைவாக இலங்கைக்கு வழங்குவதற்காக இந்திய அரச அதிகாரிகள் இலங்கையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதனை இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமது நாட்டில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம்,இந்திய அரசாங்கத்துக்கு தகவல்அனுப்பியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான உரிய ஆவணங்களை இலங்கையின் சுகாதார அமைச்சு இலங்கையின் சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்திருந்தது.
கொரோனா தடுப்பூசிகளுக்கான சட்ட அனுமதிக்காகவே இந்த ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டன.