முல்லைத்தீவு - குருந்தூர் சிவன் ஆலயப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சூலாயுதம் பிடுங்கி எறியப்பட்ட விடயத்தை சிலர் தவறாக சித்தரித்து வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் குருந்தூர் பகுதிக்கு தனது குழுவினருடன் விஜயம் செய்திருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இப்பகுதியில் சூலாயுதம் அகற்றப்பட்டதாக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். ஆனால் குறித்த சிலர் இச் செயற்பாடு பொய்யெனக்கூறியிருந்தது.
நீங்களே இப்பகுதியில் வைரவர் சூலம் முறித்து அகற்றப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம் எனக் கூறியுள்ளார்.