இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்களின் சடலங்கள்

Report Print Ajith Ajith in இலங்கை
320Shares

இலங்கையின் கடலில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல்படையிடம் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒப்படைத்தனர்.

யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 04 உடலங்களும் முறையாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக பொது அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதனையடுத்து தூதரக பொது அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில், இலங்கை கடற்படை 04 உடலங்களையும் ஒப்படைத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனா காரணமாக சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ளப்பட்டன.