உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி அபாய கட்டத்தை எட்டியுள்ள இலங்கை! வெளியாகியுள்ள புதிய தகவல்

Report Print Sujitha Sri in இலங்கை
252Shares

இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்துவிட்டது.

இந்த நேர்மறை வீதமானது ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில் இருந்ததுடன், பின்னால் 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்து, இப்போது 5ஆம் மட்டத்தை கடந்து 5.5 அளவில் உள்ளது. இது அதிக அபாயமான நிலையாகும்.

எவ்வாறாயினும் வைரஸ் தொற்று இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை. குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள்.

எனினும் அண்மைய தொற்றுக்கள் மேற்படி இரு கொத்தணிகளுடனும் தொடர்பற்றவை. துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறிவிட்டது.

எனவே இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.