கடந்த 2019ஆம் ஆண்ட ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பந்தமான அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முவைக்கப்பட்டு இலங்கை சந்தேக நபர்கள் மற்றும் அமெரிக்காவில் இயங்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக அந்நாட்டுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, அமெரிக்க நீதித்துறை திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கும் நோக்கில் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, அமெரிக்க நீதித்துறை திணைக்களத்தின் வெளிவிவகாரங்கள் தொடர்பான பிரதி தலைவர் டேன் ஸ்டீகல் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணையத்ளம் வழியாக கலந்துரையாடியதாக வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இப்படியான குற்றவாளிகள் மாத்திரமல்லாது அமெரிக்க சட்டங்களுக்கு முரணாக பயங்கரவாதம் மற்றும் தற்கொலை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை ஊக்கப்படுத்தும், அமெரிக்காவில் இயங்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளை நெருக்கமாக கண்காணிக்குமாறு தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, அமெரிக்க நீதித்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு பொருள் ரீதியான உதவிகளை வழங்கியமை சம்பந்தமாக இலங்கையை சேர்ந்த மூன்று பேருக்கு எதிராக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட நீதிமன்றத்தல் சில மாதங்களுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.