இந்தியாவிடம் இருந்து மேலும் 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள்

Report Print Steephen Steephen in இலங்கை
67Shares

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள எஸ்ட்ரா சேனோகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து எதிர்வரும் வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இந்திய நிறுவனத்திடம் இருந்து 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அரச மருந்து கூட்டுத்தாபனம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.

பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமணவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த முறை இந்திய இலங்கைக்கு இலவசமாக 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.