தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

Report Print Ajith Ajith in இலங்கை
160Shares

நீதிமன்ற அவமதிப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் 10 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவருக்கு உயிராபத்து இருப்பதாக கூறி எதிர்க்கட்சி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனிச்சிறையில் தொலைக்காட்சி உட்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே அங்குனாகொலபெலஸ்ஸ சிறையில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.