பங்காளிக் கட்சிகளை கடும் தொனியில் எச்சரித்த பஸில்! சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

Report Print Dias Dias in இலங்கை
540Shares

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணியின் பணியை எவரும் முன்னெடுக்க முடியாது எனவும் அவ்வாறானவர்களை வெளியேற்றவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் கடும் தொனியில் எச்சரித்துள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில் - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸிலுக்கும் அக்கட்சியின் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரை இலக்குவைத்து பஸில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பஸில் நாடாளுமன்றம் வருவதை தடுப்பதில் மேற்படி தலைவர்களே முன்னின்று செயற்பட்டனர்.

இவர்களுக்கு சார்பான தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பஸில் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக ஆளும் கட்சிக்குள் இருக்கும் பங்காளிக் கட்சியிகளின் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் பல விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் அதற்கு பதிலாக ஆளும் தரப்பில் இருந்து எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே பஸில் ராஜபக்ச இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.