ஐ.நாவில் இலங்கையின் கோரிக்கையை ஏற்க மறுப்பு; அரசாங்கம் கடும் எதிர்ப்பு

Report Print Dias Dias in இலங்கை
2333Shares

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் புறக்கணித்ததாக இலங்கை கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் பதில்களையும் இணைந்து ஆணையாளரின் அறிக்கையுடன் வெளியிடுமாறு ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி கோரிக்கை விடுத்திருந்தார், இருப்பினும் குறித்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு திருத்தப்படாத அறிக்கை பேரவையின் 46ஆவது அமர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்து மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நஜாத் ஷமீமுக்கு எழுதிய கடிதத்தில், இந்த ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 27 அன்று இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் முன்கூட்டியே திருத்தப்படாத பதிப்பு குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது என ஜெனீவிவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கைக்கான தூதுவரும் நிரந்தர பிரதிநிதியுமான சி.ஏ. சந்திரபிரேம சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மனித உரிமைகள் பேரவை உட்பட எந்தவொரு நிறுவனமும் உறுப்பு நாடு பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டால், அத்தகைய அறிக்கை சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பதில்களையும் இணைத்தே வெளியிடப்பட வேண்டும் என சுட்டிக்காட்டபட்டிருந்தது.

Youis My Like This Video