ரணிலுக்கு ஏற்பட்ட பலத்த சந்தேகம்? கடும் சீற்றத்தில் கோட்டாபய அரசாங்கம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in இலங்கை
947Shares

கடந்த வாரம் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் புறக்கணித்துவிட்டதாக இலங்கை தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பதில்களையும் இணைத்து ஆணையாளரின் அறிக்கையுடன் வெளியிடுமாறு ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நஷாத் ஷமீமுக்கு எழுதிய கடிதத்தில் கோரியிருந்தார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் விசாரணை அறிக்கையில் இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலைநேரச் செய்திகளின் தொகுப்பு,