இலங்கையில் 2 மாதங்களில் இத்தனை கொலைகளா? வலுக்கும் உறவுகளுடனான விரிசல்!

Report Print Banu in இலங்கை
296Shares

இலங்கையில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றமையை அன்றாடம் நாம் அறிந்துகொள்ளும் ஊடக செய்திகளே சான்று பகர்கின்றன.

குறிப்பாக இந்த வருடம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், நாட்டில் பலர் திட்டமிட்ட வகையிலும், திட்டமிடப்படாத தாக்குதல்களாலும் உயிரிழந்துள்ளனர்.

கொலைகள், தாக்குதல்கள் போன்ற குற்றச் செயல்களினால் பல்வேறு விளைவுகளை குடும்பங்களும், சமூகங்களும் ஏன் இந்நாடும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு குற்றமும் சட்ட மீறலாகும். அது மனித உரிமை மீறலாகும்.

தனிநபர்கள் புரியும் குற்றம், தனிநபருக்கு எதிரான குற்றம், வன்முறைசார் குற்றம், பொது ஒழுங்கு மீறல்கள், மதம் மற்றும் பொது வழிபாட்டுக்கு எதிரான குற்றம்.

இணையத்தளங்களினூடான குற்றங்கள் என குற்றங்கள் பல்வேறு வகைப்படுத்தலுக்கு உட்படுகிறது.

எனினும் இவற்றில் மிக முக்கியமாக மனித உயிரை பறிக்கும் குற்றச்செயல்கள் மிகக்கொடுமையானது. அதற்காக கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களை வெறுமனே கடந்து செல்ல முயடிாது.

எனினும் மனிதனின் உயிர் வாழும் உரிமையை பறிக்கும் இந்த செயல் இலங்கைப் போன்ற ஒரு நாட்டில் தொடர்ந்து இடம்பெறுவது கலலைக்குரியது மாத்திரமன்றி கண்டிக்கத்தக்கது.