இலங்கையில்அமைச்சரவை முழுமையாக மாற்றம்!

Report Print Thayalan Thayalan in இலங்கை
இலங்கையில்அமைச்சரவை முழுமையாக மாற்றம்!

இலங்கையில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதற்கான முதற்கட்ட செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், முழுமையான அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவையினை அமைக்கும் மீளாய்வு நடவடிக்கைகள் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய அமைச்சுப் பொறுப்புக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்த அறிக்கை, எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன், முழுமையான அமைச்சவை மாற்றம் நிகழுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.