புதிய பணிப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு

Report Print Kumutha Kumutha in அறிக்கை
77Shares

சுகாதார அமைச்சின் நிதி விடயத்திற்கென புதிய பணிப்பாளர் ஒருவர்நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்துள்ள நிலையில், அதற்குபல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சுகாதார அமைச்சின் நிதி நிலைமைகளை அவதானிக்க பணிப்பாளர் ஒருவர் நியமிப்பதற்குஎதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் அடுத்தவாரமளவில் அரச வைத்திய அதிகாரிகளின் மத்திய குழுகூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என இந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர்நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளுக்கு பணிப்பாளரை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை காலமும் சுகாதார துறையில் அனைத்து நடவடிக்கைகளும் ஒருபணிப்பாளரின் கீழேயே இடம்பெற்று வந்துள்ளதாகவும், இதன் போது அனைத்துநடவடிக்கைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் வைத்தியர் லால்பனாபிட்டடிய தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய பணிப்பாளர்களை நியமிப்பதால் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ,ஏற்படும் என இந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட கண்டி வைத்தியசாலையின்பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments