அதிகரித்து வரும் புதையல் மோகம்

Report Print Thirumal Thirumal in அறிக்கை
90Shares

வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை நேற்று மாலை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் விசேட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது புதையல் தோண்டியதன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அதற்கென உபயோகப்படுத்திய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கற்குழியொன்றை நடாத்தி செல்லும் நோக்கிலேயே இவர்கள் இவ்விடத்தில் புதையல்தோண்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments