காணாமல் போனோர் சட்டமூலம் : ரத்தன தேரர் அதிருப்தி

Report Print Ajith Ajith in அறிக்கை
109Shares

நாடாளுமன்றத்தில் நேற்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறை குறித்து தாம் அதிருப்தியடைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு சட்டமூலத்தை நிறைவேற்ற உரியமுறைகள் இருக்கின்றன.

எனினும் அரசாங்கம் அதனை கையாண்ட விதமும் கூட்டு எதிர்க்கட்சியினர் செயற்பட்ட விதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டபோதும் அந்த திருத்தங்கள் போதுமானவையல்ல என்று தேரர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு பொதுமக்கள் வழங்கிய ஆணை இவ்வாறு நசுக்கப்படக்கூடாது என்று தேரர்குறிப்பிட்டுள்ளார்.

Comments