விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின்கீழ் எமிழ்காந்தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Report Print Ajith Ajith in அறிக்கை
154Shares

சுனாமி நிதிகளை பிழையான வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ் மற்றும் எமிழ்காந்தன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமாஅதிபர் பரிந்துரை செய்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த பரிந்துரை அறிக்கை நேற்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புனர்அமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனமான ராடாவின் ஊடாக சுனாமிக்கான நிதியை விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டுக்காக 2015ஆம் ஆண்டு இது தொடர்பில் டிரான் அலஸ், பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிதி விடுதலைப்புலிகளின் உறுப்பினரான எமிழ்காந்தன் மூலமாகவே விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே சட்டமாஅதிபரின் அறிக்கையில் எமிழ்காந்தனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments