தாய்லாந்து குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!

Report Print Kumutha Kumutha in அறிக்கை
138Shares

தாய்லாந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நாடான தாய்லாந்தில் பல இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பினால் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று தாய்லாந்து மகாராணியின் பிறந்தநாள் என்பதால் இதனை குழப்புவதற்கு முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கை என்றும், இது சர்வதேச பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்னர்.

மேலும் தாய்லாந்தின் யுகிட் தீவு, ஸ்வாட்தானி , க்வாஹிங், ப்ஹாங்க நகி ஆகிய பிரதேசங்களிலேயே குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த குண்டுவெடிப்புகளில் இலங்கையர் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என வெளியுறவு அமைச்சின் வட்டாரங்கள் சிங்கள ஊடகத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments