தலைவர் உட்பட பலர் காணாமல் போனமை தொடர்பில் ஜே.வி.பி முறையீடு

Report Print Ajith Ajith in அறிக்கை

நாடாளுமன்றத்தின் மூலம் சட்டமாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகளை செய்யவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர மற்றும் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க, அரசியல்பீட உறுப்பினர்கள், சாந்த பண்டார மற்றும் எச்.டீ.ஹேரத் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலேயே முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளன.

இவர்கள், 1987 - 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களாவர்.

இந்த நிலையில் இவர்கள் தொடர்பில் குறித்த அலுவலகத்தில் முறைப்பாட்டை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Comments