இலங்கை கிரிக்கெட் சபைக்கு முரளியின் பதில்!

Report Print Ramya in அறிக்கை

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பரிசளிப்பு விழாவில் தான் கலந்துக் கொள்ள இயலாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் போட்டித் தொடரை தொடர்ந்து இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவுக்கு முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முரளிதரன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ள காரணத்தினால் பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவுக்கு முத்தையா முரளிதரன் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments