நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசம்

Report Print Shalini in அறிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர், மீராகேணி, பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாகவும், தீ வைக்கப்பட்ட சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மீராகேணியைச் சேர்ந்த பதுர்தீன் அஜ்மீர் என்பருக்குச் சொந்தமான பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிளுக்கே தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments