இராஜாங்க அமைச்சரின் அராஜகம்! இளைஞன் வைத்தியசாலையில்

Report Print Ramya in அறிக்கை

இராஜாங்க அமைச்சர் ஒருவரினால் தாக்கப்பட்ட இளைஞன்(22) ஒருவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் பல்லாம நகர் பகுதியில், நேற்று நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மூலமே இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நான் எனது வாகனத்தில் பயணிக்கும் போது குறித்த இளைஞன் நடு வீதியில் குடிபோதையில் இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளின் மூலம் தங்களிடம் ஒப்படைத்தேன்” என பிரதியமைச்சர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, குறித்த இளைஞனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் குடிபோதையில் இருக்கவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தனிப்பட்ட காரணத்திற்காகவே குறித்த இளைஞனை பாலித தாக்கியுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments