பணிப்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை

Report Print Kumutha Kumutha in அறிக்கை

ஹற்றன் கல்வி வலய பணிப்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப்பரீட்சையின் போது மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் ஹற்றன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு கல்வி பணிப்பாளர் அனுமதியின்றி சென்றமைதொடர்பாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார விசாரணை அறிக்கையினை கோரியுள்ளார்.

மத்திய மாகாண கல்வி பணிப்பாளரிடமே குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்வி வலய பணிப்பாளர் அனுமதியின்றி பரீட்சைகள் மத்திய நிலைத்துக்கு சென்றமையானது சட்டவிரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டே இது தொடர்பான அறிக்கையினைபரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments