பிடல் கஸ்ட்ரோவின் 90வது பிறந்த நாளுக்காக செய்யப்பட்ட பெரிய சுருட்டு

Report Print Kumutha Kumutha in அறிக்கை

சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவை கௌரவிக்கும் முகமாக 90 மீற்றர் நீளமான சுருட்டுnதயாரிக்கப்பட்டுள்ளது.

கியுபாவின் முன்னாள் பிரதமரும், 2008ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்த பொதுவுடமை அரசியல்வாதியான பிடல் கஸ்டோவின் 90ஆவது பிறந்த தினம்இன்றாகும்.

இவரது 90வது பிறந்த தினத்தின் சிறப்பம்சமாக கியுபாவின் புகழ்மிக்க சுருட்டு நிறுவனம் ஒன்று 90 மீற்றர் நீளத்தில் சுருட்டு ஒன்றினை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் கெஸ்டலர் என்ற நபரே குறித்த சுருட்டினை தயாரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளொன்றிட்கு 12 மணித்தியாலங்களை செலவிட்டு இவர் இந்த சுருட்டினை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments