கடலுக்கடியில் பாரிய நிலநடுக்கம் - 7.3 ரிச்டராக பதிவு

Report Print Shalini in அறிக்கை
456Shares

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மேலும், குறித்த நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிச்டராக பதிவாகியுள்ளது.

கடலுக்கு அடியில் 1500 மைலுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புக்களோ வேறு எந்த பாதிப்புக்களோ ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் என்னும் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments