பாதயாத்திரை செல்வதால் மாலபே கல்லூரியை மூடமாட்டார்கள்

Report Print Kumutha Kumutha in அறிக்கை

பாதயாத்திரை செல்வதால் மட்டும் மாலபே வைத்திய கல்லூரியை மூடமுடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் மாணவர் அமைப்புக்கள் எவ்வித ஆர்ப்பாட்டங்களை முன்வைத்தாலும் தற்போதைய அரசு கல்வியை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டில் இருந்து பின்வாங்காது என இந்த அமைப்பின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, மாணவர்கள் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக முன்னெடுக்கும் அனைத்து போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கும் எவ்வித பயனுமில்லை என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் மாத்திரமே இலாபங்கள் பெற்றக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments