மின்கம்பத்துடன் மோதிய லொறி - இருவர் படுகாயம்

Report Print Rusath in அறிக்கை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று லொறி ஒன்று மின்கம்பத்தோடு மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த லொறி வீதியருகே இருந்த அதி வலு கொண்ட மின்கம்பிகளைத் தாங்கியிருக்கும் மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதியும் உதவியாளரும் படுகாயங்கள் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த விபத்தின் காரணமாக மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததால் காத்தான்குடி நகரத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டு ஓடுகளை இறக்கிக் கொண்டிருந்த மற்றுமொரு லொறியொன்றுடனும் இந்த லொறி மோதிச் சென்றதில் அந்த லொறிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் பொலொன்னறுவையைச் சேர்ந்தவர்கள் என அறிய வந்துள்ளதுடன். இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...

Comments