வீரவங்சவுக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in அறிக்கை

காலாவதியான ராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்ததாக குற்றம் சுமத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான கணினி சாட்சியங்களை பெற்றுக்கொள்ள மேலும் கால அவகாசம் வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரிக்கை விடுத்தது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஒத்திவைத்தது.

Latest Offers

loading...

Comments