கடந்தகால பாரிய நிநி கொள்ளையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சமகால அரசாங்கம்

Report Print Vethu Vethu in அறிக்கை

கடந்த கால மோசடியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை சமகால அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

அதற்கமைய போலி ஆவணம் தயாரிக்க குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக, சட்டமா அதிபர் கடந்த 9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இதுவரை காலமும் கிடப்பில் போட்டிருந்த வழக்கு தொடர்பில் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய 50 கோடியே 30 லட்சத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்து அதனை பகிர்ந்து வழங்கப்படாமை குறித்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் அஜித் நிஷாந்த குணசேகரவுக்கு எதிராக கடந்த 8ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிளப்பிட்டிய முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எவன்கார்ட் தலைவருக்கு எதிராக, அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராடா நிறுவன மோசடியாளர் டிரான் அலஸிற்கு எதிராக அண்மையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

திறைசேரியினால் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக வட கிழக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட 200 மில்லியன் பணத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சூழ்ச்சி மேற்கொண்டமை உட்பட கடுமையான குற்றச்சாட்டுகள் 7 இன் கீழ் டிரான் பிரசன்ன கிறிஸ்டோபர் அலஸ் உட்பட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் இறுதி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பொது சொத்து சட்டத்தின் கீழ் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு ராடா நிறுவனத்தில் பிரதான நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட பேராசிரியர் ரொஹான் சாலிய அபேசிங்க விக்ரமசூரிய, விடுதலை புலிகள் அமைப்பின் வட, கிழக்கு நிதி பிரிவின் தலைவராக செயற்பட்ட என்டனி எமில்காந்தன் மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு எதிராக கடுமையான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வழக்கு தாக்கல் செய்வதனை வேகமாக்கும் போது இது தொடர்பில் உண்மை தகவல்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும். எனினும் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments