முன்னாள் நீதிபதி குற்றமற்றவர் - துஸ்பிரயோக வழக்கிலிருந்து விடுதலை

Report Print Kumutha Kumutha in அறிக்கை

தன்னுடைய வீட்டில் வேலைசெய்த வேலைக்கார சிறுமியை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய வழக்கின் சந்தேகநபரான முன்னாள் நீதிபதி சரத் ஆப்ரூ குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதி சரத் ஆப்ரூ கடந்த மாதம் தனது வீட்டின் மேல்மாடியில் இருந்து விழுந்து உயரிழந்துள்ளதால் அவர் மீதான குறித்த வழக்கை நிறைவுக்கு கொண்டு வர கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நீதிபதி சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நீதிபதி உயிரிழந்துள்ளமையினால் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை சாதாரண சந்தேகங்களால் நிருபிக்க முடியாது என்றும், எனவே அவரை நிரபராதியாக தீர்ப்பளிக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்றில் கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வழக்கு இன்றுடன் நிறைவுக்கு வருவதாக நீதிபதிஅறிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments