முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தேவின் புதல்வர் கைது - விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Report Print Steephen Steephen in அறிக்கை

அரச பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தேவின் புதல்வர் சானுக்க ரத்வத்தே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவரை கைது செய்துள்ளனர்.

சானுக்க ரத்வத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேவின் சகோதரராவார். சானுக்க ரத்வத்தே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் அரச நிதியை தவறாக கையாண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

லொஹான் ரத்வத்தே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கம் வகிப்பதுடன், மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்து வருகிறார்.

லொஹான் ரத்வத்தேவின் தந்தையான அனுருத்த ரத்வத்தே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தாயரான முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சானுக்க ரத்வத்தே உட்பட 5 பேர் விளக்கமறியலில்

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தேவின் புதல்வர் சானுக்க ரத்வத்தே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

120 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் சானுக்க ரத்வத்தே உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments