பாம்பன் அருகே கரை ஒதுங்கிய அரியவகை இராட்சத புள்ளிசுறா

Report Print Ashik in அறிக்கை

பாம்பன் அருகே குந்துகால் கடற்கரையில் சுமார் 1500 கிலோ எடையும், 17 அடி நீளமும் கொண்ட அரியவகை புள்ளிசுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய புள்ளி சுறாவை உடல்கூறு சோதனை செய்து புதைத்தனர்.

உலகிலேயே மிக அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதியாகும்.

குறித்த சுறா நோய் வாய்ப்பட்டு அல்லது பெரிய அளவிளான சரக்கு கப்பலின் எஞ்சினில் அடிபட்டு இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஆழ்கடல் பகுதியில் வசிக்கக்கூடியது எனவும் சங்கு வகைகள் மற்றும் அதிக முள்பகுதிகொண்ட இன மீன்களை உணவாக கொண்டு வாழும் தன்மையுடையது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...

Comments