அவுஸ்திரேலிய பெண்ணை கத்தியால் குத்திய நபர் கைது

Report Print Steephen Steephen in அறிக்கை

வெலிகம, மிரிஸ்ஸ பகுதியில் அவுஸ்திரேலிய பெண்ணொருவரின் காலில் கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த கைப் பையை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அவுஸ்திரேலிய பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில், 23 வயதான அவுஸ்திரேலிய பெண்ணொருவர் வீதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது மேட்டார் சைக்கிளில் வந்த நபர், பெண்ணின் காலில் கத்தியால் குத்திவிட்டு கைப் பையை பறித்துச் சென்றுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை மிரிஸ்ஸ பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நாளைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Latest Offers

Comments