பிரதி பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி தொலைபேசியில் உரையாடிய கைதி யார்?

Report Print Kumutha Kumutha in அறிக்கை

பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் பெரோவின் பெயரை பயன்படுத்தி நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு பள்ளேகல சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளருக்கும் அழைப்பை மேற்கொண்டிருப்பது தொடர்பில் இன்று பொலிஸ் விசாரணைப் பிரிவு கொழும்பு பிரதான நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சிறைச்சாலையில் உள்ள குறித்த நபரிடம் 15ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை விசாரணைகளை மேற்கொள்ள காலம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் உத்தரவிடுமாறு பொலிஸார் இன்று நீதிமன்றிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments