பொலிஸ்மா அதிபரின் பெயரில் பெண்களை ஏமாற்றியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Kumutha Kumutha in அறிக்கை
84Shares

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றி வந்த இளைஞருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் நியுசிலாந்தில் இருந்து இலங்கை வந்த போதே கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனைகளுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments