முல்லைத்தீவு கரைதுறை பற்று பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றின் பிராந்திய புனரமைப்பு திட்டத்தின் ஊடாக 57 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்று மாலை 3.00 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் உதயராணி முனிஸ்வரன் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் குணபாலன் உட்பட பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
மேற்படி நிகழ்வில் நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் குடும்பங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளும் அதனால் பிள்ளைகளின் கல்வி பாதிப்படைவது தொடர்பாகவும் சிறப்பு விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் காட்சிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.