அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவைகள் பயிர் நிலங்களுக்கு சேதம் விளைவிப்பதுடன் உயிர்களையும் காவுகொண்டு வருவதும் தெரிந்ததே.
பல தடவைகள் இது தொடர்பில் கலந்துரையாடியும் இன்றளவும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மின்சாரவேலி அமைப்போம் என்று கூறப்பட்டது ஆனால் இது வரையிலும்மி ன்சாரவேலி அமைக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று கடலை அண்டிய பிரதேசமான காரைத்தீவுக்குள் காட்டுயானைகள் பிரவேசித்திருக்கின்றன.
மேலும் கடந்த இருதினங்களாக பிற்பகல் வேளைகளில் காட்டுயானைகள் காரைதீவு மக்களை அச்சுறுத்தும் வகையில் காரைதீவு பிரதேசத்தை அண்டிய வயல்வெளிகளில் நடமாடின.
இதேவேளை இன்றைய தினம் சுமார் 15 யானைகள் காரைதீவு கமநல மத்திய நிலையத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் நடமாடியுள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்படுவோர் நடிவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியையும் பொது மக்கள் முன்வைத்துள்ளனர்.
வயல் அறுவடை நிறைவுபெற்ற நிலையில் நிலவும் வறட்சி காரணமாக காட்டு யானைகள் வயல்வெளிகளில் நடமாட ஆரம்பித்துள்ளன.
மேலும் வனஜீவராசி திணைக்கள உத்தியோகஸ்த்தர் யானைகளை விரட்டும் செயற்பாடுகளில் காரைதீவு மக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.