வடக்கிற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்

Report Print Sumi in அறிக்கை
422Shares

வட மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எச்.ஏ.ஏ சரத்குமார் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

இன்றைய தினம் காங்கேசந்துறை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமையேற்றுக் கொண்டார்.

இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்ததோடு பொலிஸ் மரியாதை அணிவகுப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 5ஆவது வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக வட பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments