சுற்றுலா பங்களாவில் இருந்த தங்கப் பீங்கான்கள் திருட்டு

Report Print Kumutha Kumutha in அறிக்கை
138Shares

மொனராகல ஜிலோன் மலையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபையின் கல்வி அமைச்சுக்கு சொந்தமான சுற்றுலா பங்களாவில் இருந்த பல மில்லியன் பெறுமதியான தங்கப்பீங்கான்கள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பெறுமதிகள் குறைந்த மேசை, கதிரை உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வரும் பொலிஸார் பல மில்லியன் பெறுமதியான பொருள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை எனஅமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இது தொடர்பில் அதிகாரிகளிடம் வலியுறுத்திய போதும், இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments