ஹம்பாந்தோட்டையில் மாயமான இளைஞன் விகாரையிலிருந்து வெளிப்பட்டார்

Report Print Ajith Ajith in அறிக்கை
286Shares

ஹம்பாந்தோட்டையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மாத்தறையில் திக்வெல்ல என்ற இடத்திலுள்ள ஒரு விகாரை ஒன்றில் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

ஜி.ஜி.கயஸான் என்ற இந்த இளைஞர், கைது செய்யப்பட்டு கொழும்பு பொலிஸ் தலைமையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார்.

Comments