வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ள பியர் நிறுவனத்தால் பாரிய இழப்பு

Report Print Kumutha Kumutha in அறிக்கை
91Shares

மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையில் பியர் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று கடந்த 3 மாதங்களில் மாத்திரம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள குறித்த நிறுவனத்திற்கு மாத்திரம் நிதி அமைச்சு பாரிய வரிச் சலுகையை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் பியர் பானங்களுக்கு விசேட வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதால் அரசுக்கு 10 இலட்சத்துக்கு அதிகமான சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதை ஒழிப்பு மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி நாட்டில் உள்ள பெண்களில் அதிகமானோர் பியர் குடிப்பதற்கு பழகிவிட்டதாகவும் இலங்கையில் அதிகளவு பியர் விற்பனை செய்யப்படுவது வடக்கில் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments