காலையில் சிறைச்சாலைகளையும் இரவில் விகாரைகளையும் கோவில்களையும் சுற்றி வரும் மஹிந்த - மன நிம்மதி தேடுகின்றாரா?

Report Print Mawali Analan in அறிக்கை
207Shares

காலைமுதல் சிறைச்சாலைகளிலேயே எனது நேரத்தினை செலவிட்டு கொண்டிருந்தேன். தற்போது தான் வழிபாடுகளுக்கு செல்ல நேரம் கிடைத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இரத்தினபுரியில் உள்ள விகாரை ஒன்றின் இன்று இடம்பெற்ற பெரஹரா நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், விஷேட பரிகாரங்களுக்காக நான் தற்போது ஆலயங்களுக்கோ அல்லது விகாரைகளுக்கோ வருகை தரவில்லை. வழமையாகவே நான் வழிபாடுகளுக்கு செல்வேன்.

விகாரையில் வழிபாட்டினை முடித்துக்கொண்டு ஆலயத்திற்கும் சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளேன். இன்று காலைமுதல் சிறைச்சாலைகளுக்கும், வழக்குகளுக்கும் சென்று வந்தேன். தற்போது விகாரைகளுக்கு வந்துள்ளேன் எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே பலர் கைது செய்து செய்யப்படுவதாகவும், எப்போதோ யாரோ செய்த குற்றத்திற்கு தற்போது மஹிந்தானந்த கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பெரஹரா போன்றவை கலாச்சார நிகழ்வுகள் அதற்கு யானைகள் வழங்கப்படாமல் தடைசெய்து வைத்திருப்பது பௌத்த கலாச்சாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மஹிந்த ராஜபக்ச சமய சடங்குகளில் கலந்து கொள்வதையும், வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதும் அறிந்த விடயமே. இவற்றை அவர் மன ரீதியாக பாதிப்படைந்துள்ள காரணத்தினால் மேற்கொள்கின்றார் எனவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், தொடர் தோல்விகளின் மூலம் மஹிந்த ராஜபக்ச நிம்மதி தேடும் அல்லது மக்களின் செல்வாக்கை பெற்றுக் கொள்ள முயலும் செயற்பாடே இவை எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments