பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுத்த திகா

Report Print Kumutha Kumutha in அறிக்கை

அமைச்சர் திகாம்பரம் பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுத்துள்ளதாகவும் இதற்கான அனுமதியை இவருக்கு யார் வழங்கியது என்றும் பொதுமக்கள் உரிமைகளை பாதுகாக்கும்அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இது குறித்த தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துக்கொண்டமையை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பதற்றம்நிலவியது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் திகாம்பரம் தொலைபேசி ஊடாக பொலிஸ்மா அதிபருடன் உரையாடி உடனடியாக புஸல்லாவை பொலிஸ் நிலைய அதிகாரியைஇடமாற்றம் வழங்குமாறு கோரியுள்ளார்.

இதற்கமைய குறித்த அதிகாரிக்கு கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு இந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், குறித்த தற்கொலை சம்பவத்திற்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் 19ஆவது அரசியல் திருத்தத்தின் படி சுயாதீன ஆணைக்குழு சபை அமைக்கப்பட்டுள்ள போது அமைச்சர் திகாம்பரத்துக்கு பொலிஸ் அதிகாரியை இடமாற்றும் உத்தரவு எவ்வாறு பிறப்பிக்க முடிந்தது எனவும் பொதுமக்கள் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு வினா எழுப்பியுள்ளது.

அத்துடன் ஆறுமுகன் தொண்டமானும் பொலிஸ் நிலையங்களுக்குள் புகுந்து போடும் ஆட்டங்களையும் தமது அமைப்பு அவதானித்து வருவதாகவும் அதேப் போல் அமைச்சர் திகாம்பரத்தின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, நல்லாட்சி உடனடியாக குறித்த அமைச்சர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் இது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்குமாறும் இந்த அமைப்பு அரசிடம்வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest Offers

loading...

Comments