தேரரின் வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

Report Print Ramya in அறிக்கை

சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டி ஒன்றை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேரர் பிரித்தானியாவில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக வெளிநாடு சென்றிருந்தமையினால் அந்த வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தகவல் பதிப்பாளர் கால தாமதமாக வருகை தந்த காரணத்தினாலேயே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரர் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்ததுடன் கடவுச்சீட்டையும் அவரிடம் வழங்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேரர் தன் கடவுச் சீட்டை வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த உடன் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments