அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஐரோப்பிய புலிகளின் வலையமைப்பில் உள்ள 10 உறுப்பினர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கான போக்குவரத்து, தகவல் தொடர்பாடல் மற்றும் ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணங்களை அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகமே வழங்கியதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுடன் அமெரிக்காவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கில் உள்ள 78 ஏக்கர் நிலமானது சுரேன் சுரேந்திரனுக்குரியது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.