கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த ஓர் அங்கீகாரம்

Report Print Karan in அறிக்கை
221Shares

கிழக்கில் எமது அர்ப்பணிப்பான வைத்தியசேவைக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாக இத்தேசிய உற்பத்தித் திறன் விருதைப் பார்க்கின்றோம்.

இது எமது வைத்தியசாலை சமுகத்தின் ஒட்டுமொத்த குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வைத்திய இராசரத்தினம் முரளீஸ்வரன் என தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதினை கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசின் பரிபாலனத்தின் கீழுள்ள "ஏ" தர பெரிய ஆதார வைத்தியசாலை பிரிவில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை ஆதார வைத்தியசாலை 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த விருது தொடர்பில் தொடர்பாக கருத்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கிழக்கில் எமது அர்ப்பணிப்பான வைத்தியசேவைக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாக இந்த தேசிய உற்பத்தித் திறன் விருதைப் பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த விருது தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர் பொறியியலாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவிக்கையில்,

இது எமது வைத்தியசாலை சமுகத்தின் ஒட்டுமொத்த குழு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இவ்வெற்றி எமது குழுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி.

உண்மையிலேயே நாமனைவரும் சந்தோசமடைகின்றோம். இருவருட கால அர்ப்பணிப்பான முயற்சியின் பலனாக இவ்விருது கிடைத்தது.

இந்த விருதால் கிடைத்த உற்சாகம் மேலும் நல்ல சுகாதார சேவையை பொதுமக்களுக்கு ஆற்ற வழிவகுக்கும் என நம்புகின்றேன்.

கடந்தாண்டு போட்டியில் எமது வைத்தியசாலை ஆறுதல் பரிசை சுவீகரித்துக்கொண்டது. இம்முறை மூன்றாமிடம் கிடைத்துள்ளது. அடுத்தமுறை முதலாமிடத்தைப் பெறலாமென்று நம்புகின்றோம்.

இது எமது வைத்தியசாலையிலுள்ள அத்தியட்சகர் நிபுணர்கள் வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை சமுகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகின்றேன் என வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments