தமிழன் என்ற உணர்வால் மாத்திரம் வயிற்றை நிரப்ப முடியாது

Report Print Navoj in அறிக்கை

தமிழன் என்ற உணர்வு இருக்கத்தான் வேண்டும். உணர்வால் மாத்திரம் எமது வயிற்றை நிரப்ப முடியாது. நமது பிரதேசத்தின் தேவை என்ன? எமக்கு என்ன வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அப்போது தான் எம்மில் அபிவிருத்தியைக் காண முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுங்காங்கேணி கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மகளிர் கிளையினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது நாடு எமது பிரதேசம் என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திப்பதன் மூலம் தான் எங்களதும் எங்களது பிள்ளைகளதும் எதிர்காலம் இந்த மண்ணில் சிறந்து விளங்கும்.

வெறுமனே உணர்வுடன் மாத்திரம் எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பதனால் எம்மில் அபிவிருத்தியைக் காண முடியாது.

ஒரு சமூகம், தான் சார்ந்துள்ள சமூகத்தை நேசிக்க வேண்டும். அதற்கான தமது பிரதேசத்திற்கு வரும் அபிவிருத்திகளைத் தட்டிக்கழிப்பதன் மூலம் நாமும் எமது சமூகமும் தான் பின் நோக்கிப் போகிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வட கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி மார்க்கண்டு தர்மலிங்கம், சுங்காங்கேணி கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் எம்.கணபதிபிள்ளை பிரதேச மகளிர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...

Comments