ஜே.வி.பியின் அகில இலங்கை தொழிற்சங்க தலைவர் பதவியில் இருந்து சந்திரசேகர் விலகினார்

Report Print Steephen Steephen in அறிக்கை

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராமலிங்கம் சந்திரசேகர் விலகியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்த சந்திரசேகர், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

ஹற்றன் நகரில் நேற்று நடைபெற்ற சங்கத்தின் 10 ஆவது மாநாட்டில் உரையாற்றிய சந்திரசேகர், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தடையேற்பட்டு வருவதால், தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், தொழிற்சங்கத்திற்கு புதிய அதிகாரிகள் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Latest Offers

loading...

Comments